சீவக சிந்தாமணி 2626 - 2630 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2626 - 2630 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2626. மை திரண்ட வார் குழல் மேல் வண்டு ஆர்ப்ப மல்லிகை மெல் மாலை சூடிக்
கை திரண்ட வேல் ஏந்திக் காமன் போல் காரிகையார் மருளச் சென்றார்
ஐ திரண்டு கண்டம் குரைப்ப ஓர் தண்டு ஊன்றி அறிவின் தள்ளி
நெய் திரண்டால் போல் உமிழ்ந்து நிற்கும் இளமையோ நிலையாதே காண்

விளக்கவுரை :

2627. என்றலும் சுநந்தை சொல்லும் இறைவிதான் கண்டது ஐயா
நன்றும் அஃது ஆக அன்றே ஆயினும் ஆக யானும்
ஒன்றினன் துறப்பல் என்ன ஓள் எரி தவழ்ந்த வெண்ணெய்க்
குன்று போல் யாதும் இன்றிக் குழைந்து மெய்ம் மறந்து நின்றான்

விளக்கவுரை :

[ads-post]

2628. ஓர் உயிர் ஒழித்து இரண்டு உடம்பு போவ போல்
ஆரியன் ஒழிய அங்கு ஒளவை மார்கள்தாம்
சீரிய துறவொடு சிவிகை ஏறினார்
மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்தவே

விளக்கவுரை :

2629. நல் மயில் பொறின் மேல் போய நாளினும்
புன்மை உற்று அழுகுரல் மயங்கிப் பூப் பரிந்து
இந் நகர் கால் பொரு கடலின் எங்கணும்
மன்னனில் ஆகுலம் மயங்கிற்று என்பவே

விளக்கவுரை :

2630. அழுது பின் அணி நகர் செல்ல ஆயிரம்
தொழு தகு சிவிகைகள் சூழப் போய பின்
இழுது அமை எரி சுடர் விளக்கு இட்ட அன்னவள்
பழுது இல் சீர்ப் பம்மை தன் பள்ளி நண்ணினாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books