சீவக சிந்தாமணி 2621 - 2625 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2621 - 2625 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2621. உழந்தாலும் புத்து அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது
இழந்தார் பலரால் இடும்பை நீர் யாற்றுள்
அழுந்துமால் அப் பண்டி அச்சு இறா முன்னே
கொழுஞ் சீலம் கூலியாக் கொண்டு ஊர்மின் பாகீர்

விளக்கவுரை :

2622. பிறந்தவர்கள் எல்லாம் அவாப் பெரியர் ஆகித்
துறந்து புகழ் வேண்டார் ஓர் துற்று அவிழும் ஈயார்
அறம் கரிது சேய்த்து என்பது யாதும் அறியாரேல்
வெறும் பொருள் அது அம்மா விடுத்திடுமின் என்றாள்

விளக்கவுரை :

[ads-post]

2623. முல்லை முகை சொரிந்தால் போன்று இனிய பால் அடிசில் மகளிர் ஏந்த
நல்ல கருனையால் நாள்வாயும் பொன் கலத்து நயந்து உண்டார்கள்
அல்லல் அடைய அடகு இடுமின் ஓட்டு அகத்து என்று அயில்வார்க் கண்டும்
செல்வம் நமரங்காள் நினையன்மின் செய்தவமே நினைமின் கண்டீர்

விளக்கவுரை :

2624. அம் பொன் கலத்து அடுபால் அமர்ந்து உண்ணா அரிவை அந்தோ
வெம்பிப் பசி நலிய வெவ் வினையின் வேறாய் ஓர் அகல் கை ஏந்திக்
கொம்பின் கொள ஒசிந்து பிச்சை எனக் கூறி நிற்பாள் கண்டு
நம்பன்மின் செல்வ நமரங்காள் நல் அறமே நினைமின் கண்டீர்

விளக்கவுரை :

2625. வண்ணத் துகில் உடுப்பின் வாய் விட்டு அழுவது போல் வருந்தும் அல்குல்
நண்ணாச் சிறு கூறை பாகம் ஓர் கை பாகம் உடுத்து நாளும்
அண்ணந்து அடகு உரீஇ அந்தோ வினையே என்று அழுவாள் கண்டும்
நண்ணன்மின் செல்வ நமரங்காள் நல் அறமே நினைமின் கண்டீர்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books