சீவக சிந்தாமணி 2631 - 2635 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2631 - 2635 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2631. அருந் தவக் கொடிக் குழாம் சூழ அல்லி போல்
இருந்து அறம் பகர்வுழி இழிந்து கை தொழுது
ஒருங்கு எமை உயக் கொண்மின் அடிகள் என்றாள்
கருங் கயல் நெடுந் தடம் கண்ணி என்பவே

விளக்கவுரை :

2632. ஆர் அழல் முளரி அன்ன அருந் தவம் அரிது தானம்
சீர் கெழு நிலத்து வித்திச் சீல நீர் கொடுப்பின் தீம் தேன்
பார் கெழு நிலத்துள் நாறிப் பல் புகழ் ஈன்று பின்னால்
தார் கெழு தேவர் இன்பம் தையலாய் விளைக்கும் என்றாள்

விளக்கவுரை :

[ads-post]

2633. அறவுரை பின்னைக் கேட்டும் அடிகள் மற்று எமக்கு வல்லே
துறவு தந்து அருளுக என்னத் தூ நகர் இழைத்து மேலால்
நற விரி தாமம் நாற்றி வானகம் விதானித்து ஆய்ந்து
திறவிதின் தவிசு தூபம் திருச் சுடர் விளக்கு இட்டாரே

விளக்கவுரை :

2634. பாலினால் சீறடி கழுவிப் பைந்துகில்
நூலினால் இயன்றன நுனித்த வெண்மைய
காலனைக் கண் புதைத்து ஆங்கு வெம் முலை
மேல் வளாய் வீக்கினார் விதியின் என்பவே

விளக்கவுரை :

2635. தேன் உலாம் மாலையும் கலனும் சிந்துபு
பால் நிலாக் கதிர் அன அம் மென் பைந்துகில்
தான் உலாய்த் தட முலை முற்றம் சூழ்ந்து அரோ
வேனிலான் வருநெறி வெண்முள் வித்தினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books