சீவக சிந்தாமணி 2506 - 2510 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2506 - 2510 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2506. மாதர் தன் வனப்பு நோக்கி மகிழ்ந்து கண் இமைத்தல் செல்லான்
காதலித்து இருப்பக் கண்கள் கரிந்து நீர் வரக் கண்டு அம்ம
பேதைமை பிறரை உள்ளி அழுபவர்ச் சேர்தல் என்றாள்
வேதனை பெருகி வேல்கண் தீ உமிழ்ந்திட்ட அன்றே

விளக்கவுரை :

2507. நாறு சாந்து அழித்து மாலை பரிந்து நன் கலன்கள் சிந்திச்
சீறுபு செம்பொன் ஆழி மணிவிரல் நெரித்து விம்மா
ஏறியும் இழிந்தும் ஊழ் ஊழ் புருவங்கள் முரிய நொந்து
தேறு நீர் பூத்த செந் தாமரை முகம் வியர்த்து நின்றாள்

விளக்கவுரை :

[ads-post]

2508. இற்றது என் ஆவி என்னா எரிமணி இமைக்கும் பஞ்சிச்
சிற்றடிப் போது புல்லித் திருமகன் கிடப்பச் சேந்து
பொற்ற தாமரையின் போந்து கருமுத்தம் பெழிபவே போல்
உற்று மை கலந்து கண்கள் வெம்பனி உகுத்த அன்றே

விளக்கவுரை :

2509. கொண்ட பூண் நின்னைச் சார்ந்து குலாய்க் கொழுந்து ஈன்ற கொம்பே
கண்டு கண் கரிந்து நீராய் உகுவது கரக்கலாமே
பண்டியான் செய்த பாவப் பயத்தை யார்க்கு உரைப்பென் தேன்காள்
வண்டுகாள் வருடி நங்கை வரம் தர மொழிமின் என்றான்

விளக்கவுரை :

2510. பூவையும் கிளியும் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கிக்
காவலன் மடந்தை உள்ளம் கல் கொலோ இரும்பு கொலோ
சாவம் யாம் உருகி ஒன்றும் தவறு இலன் அருளும் நங்கை
பாவை என்று இரத்தும் என்ற பறவைகள் தம்முள் தாமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books