சீவக சிந்தாமணி 2571 - 2575 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2571 - 2575 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2571. கைத்தலம் மந்தி கொண்ட கைம் மகப் போன்று தன்கண
பத்திமை விடாது மேல் நாள் படைக் கலம் நவின்ற பொன்தேர்
மைத்துன மன்னர்க்கு எல்லாம் வள நிதி மணி செய் மான் தேர்
தத்து நீர் மிசைச் செல் மாவும் தவழ் மதக் களிறும் ஈந்தான்

விளக்கவுரை :

2572. கோமகன் கோல மான் தேர்க் கோவிந்தன் என்னும் கொய்தார்
மாமற்கு மடங்கல் ஆற்றல் கட்டியங் காரன் என்ற
தீமகன் உடைய எல்லாம் தேர்ந்தனன் கொடுத்துச் செல்வன்
ஓவல் இல் கறவை ஒத்தான் உலோக பாலற்கு மாதோ

விளக்கவுரை :

[ads-post]

2573. பேர் இடர் தன்கண் நீக்கிப் பெரும் புணை ஆய தோழற்கு
ஓர் இடம் செய்து பொன்னால் அவன் உரு இயற்றி ஊரும்
பார் இடம் பரவ நாட்டி அவனது சரிதை எல்லாம்
தார் உடை மார்பன் கூத்துத் தான் செய்து நடாயி னானே

விளக்கவுரை :

2574. ஊன்விளை யாடும் வை வேல் உறுவலி சிந்தித்து ஏற்பத்
தான்விளை யாடி மேல் நாள் இருந்தது ஓர் தகை நல் ஆலைத்
தேன்விளை யாடும் மாலை அணிந்து பொன் பீடம் சேர்த்தி
ஆன்விளை யாடும் ஐந்து ஊர் அதன் புறம் ஆக்கினானே

விளக்கவுரை :

2575. கொட்டமே கமழும் குளிர் தாமரை
மொட்டின் வீங்கிய வெம் முலை மொய் குழல்
அட்டும் தேன் அழியும் மது மாலையார்
பட்டம் எண்மரும் பார் தொழ எய்தினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books