கலித்தொகை 2 of 150 தொகைகள்
முதலாவது : பாலைக்கலி
ஆசிரியர்: பெருங்கொடுங்கோன்
2.
தொடங்கல் கண் தோன்றிய
முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல் சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்
சீறு அரும் கணிச்சியோன் சினவலின், அவ்வெயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை
பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை -
மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய,
இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று ஐய!
விளக்கவுரை :
தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ -
நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்,
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை;
விளக்கவுரை :
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக்
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ -
தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை;
விளக்கவுரை :
இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக்
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ -
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை;
விளக்கவுரை :
என இவள்,
புன்கண் கொண்டு இனையவும், பொருள்
வயின் அகறல்
அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்றுக்
காழ் வரை நில்லாக் கடும் களிற்று ஒருத்தல்
யாழ் வரைத் தங்கியாங்குத், தாழ்பு, நின்
தொல்கவின் தொலைதல் அஞ்சி, என்
சொல்வரைத் தங்கினர், காதலோரே.
விளக்கவுரை :