ஐங்குறு நூறு 266 - 270 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 266 - 270 of 500 பாடல்கள்

266. சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு
குறுங்கை இரும்புலி பொரூஉம் நாடன்
நனிநாண் உடைமையம் மன்ற
பனிப்பயந் தனநீ நய்ந்தோள் கண்ணே.

விளக்கவுரை :

267. சிறுகண் பறிப் பெருஞ்சின ஒருத்தல்
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி
ஐவனம் கவரும் குன்ற நாடன்
வண்டுபடு கூந்தலைப் பேணிப்
பண்பில சொல்லும் தேறுதல் செத்தே.

விளக்கவுரை :

268. தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடு
வளமலைச் சிறுதினை ய்ணீஇய கானவர்
வரையோங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும்
நன்மலை நாடன் பிரிதல்
என்பயக்கும் மோநம் விட்டுத் துறந்தே.

விளக்கவுரை :

269. கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை
விஅளைந்த செறுவில் தோன்றும் நாடன்
வாராது அவண்உறை நீடின் நேர்வளை
இணை ஈர் ஓதி நீயழத்
துணைநனி இழக்குவென் மடமை யானே.

விளக்கவுரை :

270. கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில்
தலைவிளை கானவர் கொய்தனர் பொய்ரும்
புல்லென் குன்றத்துப் புலம்புகொள் நெடுவரை
காணினும் கலிழுநோய் செத்துத்
தாம்வந் தனர்நம் காத லோரே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books