பழமொழி நானூறு 141 - 145 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 141 - 145 of 400 பாடல்கள்

141. பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
'இருதலைக் கொள்ளியென் பார்'.

விளக்கவுரை :

16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல்

142. பேருலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு - யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும்
'கண்டது காரணம்ஆ மாறு.'

விளக்கவுரை :

143. யாம்தீய செய்த மலைமறைந்த(து) என்றெண்ணித்
தாம்தீயார் தம்தீமை தேற்றாராய் - ஆம்பல்
மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
'கணையினுந் கூரியவாம் கண்'.

விளக்கவுரை :

144. வெள்ளம் வருங்கால் ஈரம்பட்(டு) அஃதேபோல்
கள்ளம் உடையாருக் கண்டே அறியலாம்
ஒள்அமர் கண்ணாய்! ஒளிப்பினும் 'உள்ளம்
படர்ந்ததே கூறும் முகம்'.

விளக்கவுரை :

145. நோக்கி அறிகல்லாத் தம்உறுப்புக் கண்ணாடி
நோக்கி அறிய அதுவேபோல் - நோக்கி
முகனறிவார் முன்னம் அறிய அதுவே
'மகனறிவு தந்தை அறிவு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books