பழமொழி நானூறு 146 - 150 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 146 - 150 of 400 பாடல்கள்

146. ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறமரிதால் தேமொழி ! - யாரும்
குலக்குல வண்ணத்த ராகுப ஆங்கே
'புலப்பல வண்ணத்த புள்'.

விளக்கவுரை :

147. காப்பான் மடமகள் காப்பான்கைப் பட்டிருந்தும்
மேய்ப்பாட்ட தென்றுண்ணா ளாயினாள் - தீப்புகைபோல்
மஞ்சாடு வெற்ப ! 'மறைப்பினும் ஆகாதே
தஞ்சாதி மிக்கு விடும்'.

விளக்கவுரை :

148. முயலலோ வேண்டா முனிவரை யானும்
இயல்பினார் என்பது இனத்தால் அறிக
கயலியலும் கண்ணாய் ! கரியரோ வேண்டா
'அயலறியா அட்(டு)ஊணோ இல்'.

விளக்கவுரை :

17. முயற்சி

149. எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
தமக்குத் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோ மற்றில்லை
'தமக்கு மருத்துவர் தாம்'.

விளக்கவுரை :

150. கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
அற்ற முடிப்போன் அறிவுடையான் - உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப! 'இளையோனே ஆயினும்
மூத்தோனே ஆடு மகன்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books