பழமொழி நானூறு
151 - 155 of 400 பாடல்கள்
151. வேளாண்மை செய்து விருந்தோம்பி
வெஞ்சமத்து
வாளாண்மை
யாலும் வலியராய்த் தாளாண்மை
தாழ்க்கு
மடிகோள் இலராய் 'வருந்தாதார்
வாழ்க்கை
திருந்துதல் இன்று'.
விளக்கவுரை :
152. ஒன்றால் சிறிதால் உதவுவதொன்(று)
இல்லையால்
என்றாங்(கு)
இருப்பின் இழுக்கம் பெரிதாகும்
அன்றைப்
பகலேயும் வாழ்கலார் நின்றது
'சென்றது பேரா தவர்'.
விளக்கவுரை :
153. இனியாரும் இல்லாதார் எம்மிற்
பிறர்யார்
தனியேம்யாம்
என்றொருவர் தாமடியல் வேண்டா
முனிவில
ராகி முயல்க 'முனிவில்லார்
முன்னிய(து)
எய்தாமை இல்'.
விளக்கவுரை :
154. தற்றூக்கித் தன்துணையும் தூக்கிப்
பயன்தூக்கி
மற்றவை
கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
'யாதானும் ஒன்றுகொண்டு யாதானும்
செய்தக்கால்
யாதானும்
ஆகி விடும்'.
விளக்கவுரை :
155. வீங்குதோள் செம்பியன் சீற்றம்
விறல்விசும்பில்
தூங்கும்
எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும்
திறத்தால் முயல்க தாம் 'கூரம்பு
அடியிழுப்பின்
இல்லை அரண்'.
விளக்கவுரை :