பழமொழி நானூறு 126 - 130 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 126 - 130 of 400 பாடல்கள்

126. விலங்கேயும் தம்மோ(டு) உடனுறைதல் மேவும்
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா - இலங்கருவி
தாஅய் இழியும் மணலைநாட! 'இன்னாதே
பேஎயோ டானும் பிரிவு'.

விளக்கவுரை :

127. இனியாரை உற்ற இடர்தீர் உபாயம்
முனியார் செயினும் மொழியால் முடியா
துனியால் திரையுலாம் நூங்குநீர்ச் சேர்ப்ப!
'பனியால் குளநிறைதல் இல்'.

விளக்கவுரை :

128. தாம்நட்(டு) ஒழுகுதற்குத் தக்கார் எனல்வேண்டா
யார்நட்பே யாயினும் நட்புக் கொளல்வேண்டும்
கானாட்டு நாறும் கதுப்பினாய் ! 'தீற்றாதோ
நாய்நட்டால் நல்ல முயல்?'

விளக்கவுரை :

129. தீர்ந்தேம் எனக்கருதித் தேற்றா(து) ஒழுகித்தாம்
ஊர்ந்த பரிவும் இலராகிச் - சேர்ந்தார்
பழமை கந்தாகப் பரியார் புதுமை
'முழநட்பிற் சாணுட்கு நன்று'.

விளக்கவுரை :

130. கொழித்துக் கொளப்பட்ட நண்பின் அவரைப்
பழித்துப் பலர்நடுவண் சொல்லாடார் - என்கொல்?
விழித்தலரும் நெய்தல் துறைவா! 'உரையார்
இழித்தக்க காணிற் கனா'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books