பழமொழி நானூறு
121 - 125 of 400 பாடல்கள்
121. உறுமக்க ளாக ஒருவரை நாட்டிப்
பெறுமாற்றம்
இன்றிப் பெயர்த்தே யொழிதல்
சிறுமைக்கு
அமைந்ததோர் செய்கை அதுவே
'குறுமக்கள் காவு நடல்'.
விளக்கவுரை :
122. உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிறையுளர்
அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ்
இலங்கருவி வெற்ப! அதுவே
'சுரையாழ அம்மி மிதப்பு'.
விளக்கவுரை :
123. தேர்ந்துகண் ஓடாது தீவினையும் அஞ்சலராய்ச்
சேர்ந்தாரை
யெல்லாம் சிறிதுரைத்துத் - தீர்ந்த
விரகர்கட்
கெல்லாம் வெறுப்பனவே செய்யும்
'நரகர்கட்கு இல்லையோ நஞ்சு?'
விளக்கவுரை :
14. நட்பின் இயல்பு
124. ஒட்டிய காதல் 'உமையாள்
ஒரு பாலக்
கட்டங்கம்
வெல்கொடி கொண்டானும் கொண்டானே'
விட்டாங்கு
அகலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை
ஒட்டி யுழி.
விளக்கவுரை :
125. புரையின்றி நட்டார்க்கு நட்டார்
உரைத்த
உரையும்
பொருள்முடிவும் ஒன்றால் - உரைபிறிது
கொண்டெடுத்துக்
கூறல் கொடுங்கழித் தண்சேர்ப்ப!
'ஒன்றேற்று வெண்படைக்கோள் ஒன்று'.
விளக்கவுரை :