பழமொழி நானூறு 116 - 120 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 116 - 120 of 400 பாடல்கள்

116. கோவாத சொல்லும் குணனிலா மாக்களை
நாவா லடக்கல் அரிதாகும் - நாவாய்
களிக்கள்போல் தூங்கும் கடல்சேர்ப்ப ! 'வாங்கி
வளிதோட் கிடுவாரோ இல்'.

விளக்கவுரை :

117. தெரியாதார் சொல்லும் திறனின்மை தீதாப்
பரியார் பயனின்மை செய்து - பெரியார்சொல்
கொள்ளாது தாம்தம்மைக் காவா தவர் 'பிறரைக்
கள்ளராச் செய்குறு வார்'.

விளக்கவுரை :

118. செய்த கொடுமை உடையான் அதன்பயம்
எய்த உரையான் இடரினால் - எய்தி
மரிசாதி யாயிருந்த 'மன்றஞ்சு வார்க்குப்
பரிகாரம் யாதொன்றும் இல்'.

விளக்கவுரை :

119. முதுமக்கள் அன்றி முனிதக்கா ராய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் - அதுமன்னும்
குன்றத்து வீழும் கொடியருவி நன்னாட!
'மன்றத்து மையல்சேர்ந் தற்று'.

விளக்கவுரை :

120. தருக்கி ஒழுகித் தகவல்ல செய்தும்
பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்
கரப்புடை உள்ளம் கனற்று பவரே
'செருப்பிடைப் பட்ட பரல்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books