பழமொழி நானூறு 111 - 115 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 111 - 115 of 400 பாடல்கள்

111. குலத்துச் சிறியார் கலாந்தணிப்பான் புக்கு
விலக்குவார் மேலும் எழுதல் - நிலத்து
நிலையழுங்க வேண்டிப் புடைத்தக்கால் 'வெண்மாத்
தலைக்கீழாக் காதி விடல்'.

விளக்கவுரை :

112. சொல்எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்க்
கல்எறிந்தாற் போலத் கலாந்தலைக் கொள்வாரை
இல்இருந்(து) ஆற்ற முனிவித்தல் 'உள்ளிருந்து
அச்சாணி தாம்கழிக்கு மாறு'.

விளக்கவுரை :

113. நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா அறிவிலா மக்களைப் பேணி
ஒழுக்கி அவரோடு உடனுறை செய்தல்
'புழுப்பெய்து புண்பொதியு மாறு'.

விளக்கவுரை :

114. பொல்லாத சொல்லி மறைத்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் !
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
'நுணலும்தன் வாயால் கெடும்'.

விளக்கவுரை :

115. தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்குரைத்துப்
போக்குற்ற போழ்தில் புறனழீஇ மேன்மைக்கண்
நோக்கற் றவரைப் பழித்தலென்? என்னானும்
'மூக்கற்ற தற்கில் பழி'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books