பழமொழி நானூறு 106 - 110 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 106 - 110 of 400 பாடல்கள்

106. பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து
ஆசறு செய்யாராய் ஆற்றப் பெருகினும்
மாசற மாண்ட மனமுடையர் ஆகாத
'கூதறைகள் ஆகார் குடி.'

விளக்கவுரை :

13. கீழ்மக்கள் செய்கை

107. நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார் எளியரால் என்று - பெரியாரைத்
தங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
'திங்களை நாய்குரைத் தற்று'.

விளக்கவுரை :

108. மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின் என்பாரே- நறுநெய்யுள்
கட்டி அடையைக் களைவித்துக் 'கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்'.

விளக்கவுரை :

109. கண்ணில கயவர் கருத்துணர்ந்து கைமிக
நண்ணி யவர்க்கு நலனுடைய செய்பவேல்
எண்ணி இடர்வரும் என்னார் 'புலிமுகத்து
உண்ணி பறித்து விடல்'.

விளக்கவுரை :

110. திருந்தாய்நீ ஆர்வத்தைத் தீமை உடையார்
வருந்தினார் என்றே வயப்படுவ துண்டோ?
அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும்
'பொருந்தாமண் ஆகா சுவர்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books