பழமொழி நானூறு 101 - 105 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 101 - 105 of 400 பாடல்கள்

101. அல்லவை செய்ப அலப்பின் அலவாக்கால்
செல்வ(து) அறிகலர் ஆகிச்சி தைத்தெழுப
கல்லாக் கயவர் இயல்போல் 'நரியிற்(கு) ஊண்
நல்யாண்டும் தீயாண்டும் இல்'.

விளக்கவுரை :

102. கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது
காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப்
பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ?
'ஊரறியா மூரியோ இல்'.

விளக்கவுரை :

103. நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்
பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம்பயில் சோலை மலைநாட! என்றும்
'குரங்கினுள் நன்முகத்த இல்'.

விளக்கவுரை :

104. ஊழாயி னாரைக் களைந்திட்(டு) உதவாத
கீழாயி னாரைப் பெருக்குதல் - யாழ்போலும்
தீஞ்சொல் மழலையாய் ! தேனார் 'பலாக்குறைத்துக்
காஞ்சிரை நட்டு விடல்'.

விளக்கவுரை :

105. பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு
பூமேல் இசைமுரலும் ஊர ! அதுவன்றோ
'நாய்மேல் தவிசிடு மாறு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books