பழமொழி நானூறு 96 - 100 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 96 - 100 of 400 பாடல்கள்

96. காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை
நாடுறைய நல்கினும் நன்கொழுகார் - நாடொறும்
கையுள தாகி விடினும் 'குறும்பூழ்க்குச்
செய்யுள(து) ஆகும் மனம்'.

விளக்கவுரை :

97. கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்
பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை
புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்(று) 'அஞ்சாதே
தின்பது அழுவதன் கண்'.

விளக்கவுரை :

98. மிக்க பழிபெரிதும் செய்தக்கால் மீட்டதற்குத்
தக்கது அறியார் தலைசிறத்தல் - எக்கர்
அடும்(பு)அலரும் சேரப்ப! 'அகலுள்நீ ராலே
துடும்பல் எறிந்து விடல்'.

விளக்கவுரை :

99. மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார்
பேணா துரைக்கும் உரைகேட்டு வந்ததுபோல்
ஊணார்ந்(து) உதவுவதொன்று இல்லெனினும் 'கள்ளினைக்
காணாக் களிக்கும் களி'.

விளக்கவுரை :

100. உழந்ததூஉம் பேணாது ஒறுத்தமை கண்டும்
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப!
'முழங்குறைப்ப சாண்நீளு மாறு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books