பழமொழி நானூறு 91 - 95 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 91 - 95 of 400 பாடல்கள்

91. தக்காரோ(டு) ஒன்றித் தமராய் ஒழுகினார்
மிக்காரால் என்று சிறியாரைத் தாம்சேறார்
கொக்கார் வளவய லூரா! 'தினலாமோ
அக்காரம் சேர்ந்த மணல்'.

விளக்கவுரை :

92. தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன
வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! 'ஆகுமோ
நந்துழுத எல்லாம் கணக்கு?'.

விளக்கவுரை :

93. பூத்தாலும் காயா மரமுள மூத்தாலும்
நன்கறியார் தாமும் நனியுளர் - பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு
'உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு'.

விளக்கவுரை :

94. ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! - மூர்க்கன்தான்
கொண்டதே கொண்டு விடானாகும் 'ஆகாதே
உண்டது நீலம் பிறிது'.

விளக்கவுரை :

95. தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
யாவரே யாயினும் நன்கொழுகார் 'கைக்குமே
தேவரே தின்னினும் வேம்பு'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books