பழமொழி நானூறு 86 - 90 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 86 - 90 of 400 பாடல்கள்

86. தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்
மற்றுங்கண் ஓடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் 'சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு'.

விளக்கவுரை :

87. இறப்ப எமக்கீ(து) இழிவரலென்(று) எண்ணார்
பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே
'தால அடைக்கலமே போன்று'.

விளக்கவுரை :

88. பெரிய குடிப்பிறத் தாரும் தமக்குச்
சிறியார் இனமாய் ஒழுகுதல் - எறியிலை
வேலொடு நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ
'பூவோடு நாரியைக்கு மாறு'.

விளக்கவுரை :

89. சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர் நல்குரவு நன்றே -தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய் ! 'மோரின்
முதுநெய் தீதாகலோ இல்'.

விளக்கவுரை :

12. கீழ்மக்கள் இயல்பு

90. மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க
இனநலம் நன்குடைய ராயினும் 'என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்'

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books