பொருநராற்றுப்படை 181 - 200 of 248 அடிகள்



பொருநராற்றுப்படை 181 - 200 of 248 அடிகள்

181. றாழ் தாழைத் தண் டண்டலைக்
கூடு கெழீஇய குடி வயினாற்
செஞ் சோற்ற பலி மாங்திய
கருங் காக்கை கவவு முனையின்
மனை நொச்சி நிழலாங் கண்
ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும்
இளையோர் வண்ட லயரவும் முதியோர்
அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் சொலவும்
முடக் காஞ்சிச் செம் மருதின்
மடக் கண்ண மயில் ஆலப்

விளக்கவுரை :

191. பைம் பாகற் பழந் துணரிய
செஞ் சுளைய கனி மாந்தி
அறைக் கரும்பி னரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக
வற ளடும்பி னிவர் பகன்றைத்
தளிர்ப் புன்கின் றாழ் காவின்
நனை ஞாழலொடு மரங் குழீஇய
அவண் முனையி னகன்று மாறி
அவிழ் தளவி னகன் தோன்றி
நகு முல்லை யுகுதேறு வீப்

விளக்கவுரை :

பொருநராற்றுப்படை, முடத்தாமக் கண்ணியார், பத்துப்பாட்டு, porunaratrupadai, mudaththama kanniyaar, paththu paattu, tamil books