மலை படு கடாம் 1 - 20 of 583 அடிகள்
பாடியவர் :
பெருங் கெளசிகனார்
பாடப்பட்டவன் : நன்னன் வேண்மான்
திணை : பாடாண்திணை
துறை : ஆற்றுப்படை
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடிகள் : 583
1. திருமழை தலைஇய இருணிற விசும்பின்
விண்ணதிர் இமிழிசை கடுப்பப்
பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவொ டாகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்
மின்னிரும் பீலி அணித்தழைக்
கோட்டொடு
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த்
தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரந்
தூம்பொடு
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ
நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல்
தட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி
விளக்கவுரை :
11. நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
கடுக்கலித் தெழுந்த கண்ணகன்
சிலம்பில்
படுத்துவைத் தன்ன பாறை மருங்கின்
எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ்
சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்
இடுக்கண் செய்யா தியங்குநர்
இயக்கும்
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண்
டொழுகித்
விளக்கவுரை :