மலை படு கடாம் 201 - 220 of 583 அடிகள்



மலை படு கடாம் 201 - 220 of 583 அடிகள்

201. செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச
வறிதுநெறி ஓரீஇ வலஞ்செயாக் கழிமின்
புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர்
உயர்நிலை இதணம் ஏறிக் கைபுடையூஉ
அகன்மலை யிறும்பில் துவன்றிய யானைப்
பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல்
இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக்
கருவிர லூகம் பார்ப்போ டிரிய
உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன
வரும்விசை தவிராது மரமறையாக் கழிமின்

விளக்கவுரை :

211. உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
இரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின்
குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்
அகழ்இழிந் தன்ன கான்யாற்று நடவை
வழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பிப்
பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித்
துருவி னன்ன புன்றலை மகாரோடு
ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்
அழுந்துபட் டலமரும் புழகமல் சாரல்
விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா

விளக்கவுரை :

மலை படு கடாம், பெருங்கெளசிகனார், பத்துப்பாட்டு, malai padu kadaam, perung kowsikanaar, paththu paattu, tamil books