குறிஞ்சிப் பாட்டு 21 - 40 of 261
அடிகள்
21. யிருவே மாய்ந்த மன்ற லிதுவென
நாமறி வுறாலிற் பழியு முண்டோ
வாற்றின் வாரா ராயினு மாற்ற
வேனையுல கத்து மியைவதா னமக்கென
மானமர் நோக்கங் கலக்கிக் கையற்
றானாச் சிறுமைய ளிவளுந் தேம்பு
மிகன்மீக் கடவு மிருபெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
விருபே ரச்சமோ டியானு மாற்றலேன்
கொடுப்பினன் குடைமையுங் குடிநிர லுடைமையும்
விளக்கவுரை :
31. வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா
தெமியேந் துணிந்த வேமஞ்சா லருவினை
நிகழ்ந்த வண்ண நீநனி யுணரச்
செப்ப லான்றிசிற் சினவா தீமோ
நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானை
முத்தார் மருப்பி னிறங்குகை
கடுப்பத்
துய்த்தலை வாங்கிய புனிறுதீர்
பெருங்குர
னற்கோட் சிறுதினைப் படுபு ளோப்பி
யெற்பட வருதிய ரென நீ விடுத்தலிற்
கலிகெழு மரமிசைச் சேணோ னிழைத்த
விளக்கவுரை :