மலை படு கடாம் 41 - 60 of 583 அடிகள்


மலை படு கடாம் 41 - 60 of 583 அடிகள்

41. உயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின்
மதந்தபு ஞமலி நாவி நன்ன
துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக்
கணங்கொள் தோகையிற் கதுப்பிகுத் தசைஇ
விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்து
இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்
கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல்
புனல்கால் கழீஇய மணல்வார் புறவில்
புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்
கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ

விளக்கவுரை :

51. தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்
மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்கு
யாமவ ணின்றும் வருதும் நீயிரும்
கனிபொழி கானம் கிளையொ டுணீஇய
துனைபறை நிவக்கும் புள்ளின மானப்
புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை எழின்முலை வாங்கமைத் திரடோள்
மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்
முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்
இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப்

விளக்கவுரை :

மலை படு கடாம், பெருங்கெளசிகனார், பத்துப்பாட்டு, malai padu kadaam, perung kowsikanaar, paththu paattu, tamil books