மலை படு கடாம் 321 - 340 of 583 அடிகள்
321. மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்றோய் மீமிசை அயருங் குரவை
நல்லெழி னெடுந்தேர் இயவுவந் தன்ன
கல்யா றொலிக்கும் விடர்முழங்
கிரங்கிசை
நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து
உரவுச்சினந் தணித்துப் பெருவெளிற்
பிணிமார்
விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
ஒலிகழைத் தட்டை புடையுநர்
புனந்தொறும்
கிளிகடி மகளிர் விளிபடு பூசல்
இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
விளக்கவுரை :
331. மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங்
குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை
காந்தள் துடும்பிற் கமழ்மட லோச்சி
வன்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுபடு மிச்சிற் காழ்பயன்
கொண்மார்
கன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதை
மழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரெனக்
விளக்கவுரை :