பட்டினப் பாலை 1 - 20 of 301 அடிகள்


பட்டினப் பாலை 1 - 20 of 301 அடிகள்

பாடியவர்                         : கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன்                 : திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)
திணை                            : பாலை
துறை                             : செலவழுங்குதல்
மொத்த அடிகள்               : 301

1. வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி

விளக்கவுரை :

11. நீர்ச்செறுவி னீணெய்தற்
பூச்சாம்பும் புலத்தாங்கட்
காய்ச்செந்நெற் கதிரருந்து
மோட்டெருமை முழுக்குழவி
கூட்டுநிழல் துயில்வதியும்
கோட்டெங்கிற் குலைவாழைக்
காய்க்கமுகிற் கமழ்மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளையிஞ்சி
அனகர் வியன்முற்றத்துச்

விளக்கவுரை :

பட்டினப் பாலை, உருத்திரங் கண்ணனார், பத்துப்பாட்டு, pattina paalai, uruthirang kannanaar, paththu paattu, tamil books