முல்லைப் பாட்டு 1 - 20 of 103 அடிகள்



முல்லைப் பாட்டு 1 - 20 of 103 அடிகள்

1. நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்,
பாடிமிழ் பனிக்கடல் பருகிவல னேர்பு
கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி

விளக்கவுரை :

6. பெரும்புயல் பொழிந்த சிறுபுன் மாலை,
யருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது

விளக்கவுரை :

11. பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்,
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி
னுறுதுய ரலமர னோக்கி யாய்மக
ணடுங்குசுவ லசைத்த கையள் "கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர

விளக்கவுரை :

16. வின்னே வருகுவர் தாய" ரென்போ
ணன்னநர் நன்மொழி கேட்டன மதனா
னல்ல நல்லோர் வாய்ப்புட், டெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருத றலைவர் வாய்வது, நீநின்

விளக்கவுரை :

முல்லைப் பாட்டு, நப்பூதனார், பத்துப்பாட்டு, mullai paattu, nappuuthanaar, paththu paattu, tamil books