மதுரைக் காஞ்சி 1 - 20 of 782 அடிகள்
பாடியவர் : மாங்குடி மருதனார்
பாடப்பட்டவன் : தலையாலங்கானத்துச் செருவென்ற
பாண்டியன்
திணை : காஞ்சி
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடிகள் : 782
1. ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம் பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப
விய னாண்மீ னெறி யொழுகப்
பகற் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத்
விளக்கவுரை :
11. தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த
நோ யிகந்து நோக்கு விளங்க
மே தக மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு
கண்டு தண்டாக் கட்கின் பத்து
உண்டு தண்டா மிகுவளத் தான்
உயர் பூரிம விழுத் தெருவிற்
பொய் யறியா வாய்மொழி யாற்
புகழ் நிறைந்த நன்மாந்த ரொடு
விளக்கவுரை :