குறிஞ்சிப் பாட்டு 121 - 140 of 261
அடிகள்
121. மைந்திறை கொண்ட மலர்ந்தேந் தகலத்துத்
தொன்றுபடு நறுத்தார் பூணொடு பொலியச்
செம்பொறிக் கேற்ற வீங்கிறைத்
தடக்கையின்
வண்ண வரிவில் லேந்தி யம்புதெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி
யியலணிப் பொலிந்த வீகை வான்கழ
றுயல்வருந் தோறுந் திருந்தடிக் கலாவ
முனைபாழ் படுக்குந் துன்னருந்
துப்பிற்
பகைபுறங்க் கண்ட பல்வே லிளைஞரி
னுரவுச்சினஞ் செருக்கித்
துன்னுதொறும் வெகுளு
விளக்கவுரை :
131. முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியா
மிடும்பைகூர் மனத்தே மருண்டுபுலம்
படர
மாறுபொரு தோட்டிய புகல்வின்
வேறுபுலத்
தாகாண் விடையி னணிபெற வந்தெ
மலமர லாயிடை வெரூஉத லஞ்சி
மெல்லிய வினிய மேவரக் கிளந்தெ
மைம்பா லாய்கவி னேத்தி யொண்டொடி
யசைமென் சாய லவ்வாங் குந்தி
விளக்கவுரை :