நெடுநல் வாடை 1 - 20 of 188
அடிகள்
பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார்
நக்கீரர்
திணை : வாகை
துறை : கூதிர்ப்பாசறை
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடிகள் : 188
1. வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக்
கோடல்
நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப்
பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ
நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
விளக்கவுரை :
11. கன்றுகோ ளொழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப்
பானாள்
புன்கொடி முசுண்டைப் பொறிப்புற
வான்பூப்
பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப்
பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி
இருங்களி பரந்த ஈர வெண்மணற்
செவ்வரி நாரையொ டெவ்வாயுங் கவரக்
கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப்
பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை
அகலிரு விசும்பில் துவலை கற்ப
விளக்கவுரை :