சிறுபாணாற்றுப்படை 121 - 140 of 269 அடிகள்



சிறுபாணாற்றுப்படை 121 - 140 of 269 அடிகள்

121. மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா
ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்
களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்
பிடிக்கணஞ் சிதறும் பெயல்மழைத் தடக்கைப்
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை
நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு
தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை
வான்பொரு நெடுவரை வளனும் பாடி
முன்நாள் சென்றன மாக விந்நா
டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை

விளக்கவுரை :

131. கறவாக் பால்முலை கவர்த னோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
யொல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்
திருக்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட்

விளக்கவுரை :

சிறுபாணாற்றுப்படை, நல்லூர் நத்தத்தனார், பத்துப்பாட்டு, sirupanatrupadai, nalloor naththaththanaar, paththu paattu, tamil books