பொருநராற்றுப்படை
241 - 248 of 248 அடிகள்
241. புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்
கூனிக்
குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ
டாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக்
குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று
மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி
நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம்
விளையுட் டாகக்
காவிரி
புரக்கு நாடுகிழ வோனே.
விளக்கவுரை :
பொருநராற்றுப்படை முற்றும்