பெரும்பாணாற்றுப்படை 1
- 20 of 500 அடிகள்
பாடியவர்
: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன்
: தொண்டைமான் இளந்திரையன்
திணை
: பாடாண்திணை
துறை
: ஆற்றுப்படை
பாவகை
: ஆசிரியப்பா
மொத்த
அடிகள் : 500
1. அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான்
றெழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினந்
திருகிய கடுந்திறல் வேனிற்
பாசிலை
யொழித்த பராஅரைப் பாதிரி
வள்ளிதழ்
மாமலர் வயிற்றிடை வகுத்தத
னுள்ளகம்
புரையு மூட்டுறு பச்சைப்
பரியரைக்
கமுகின் பாளையம் பசும்பூக்
கருவிருந்
தன்ன கண்கூடு செறிதுளை
யுருக்கி
யன்ன பொருத்துறு போர்வைச்
சுனைவறந்
தன்ன விருடூங்கு வறுவாய்ப்
விளக்கவுரை :
11. பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை
நெடும்பணைத்
திரடோண் மடந்தை முன்கைக்
குறுந்தொடி
யேய்க்கும் மெலிந்துவீங்கு திவவின்
மணிவார்ந்
தன்ன மாயிரு மருப்பிற்
பொன்வார்ந்
தன்ன புரியடங்கு நரம்பின்
றொடையமை
கேள்வி யிடவயிற் றழீஇ
வெந்தெறற்
கனலியொடு மதிவலந் திரிதருந்
தண்கடல்
வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது
பொழிமழை
துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரந்
தேரும் பறவை போலக்
விளக்கவுரை :