கார் நாற்பது 36 - 40 of 40 பாடல்கள்
வினைமுற்றி மீளுந் தலைமகள் பாகற்குச் சொல்லியது
36. சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப
ஈர்ந்தண்
தளவந் தகைந்தன - சீர்த்தக்க
செல்வ
மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர்
நல்விருந்
தாக நமக்கு.
விளக்கவுரை :
தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது
37. கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி
இருங்க
லிறுவரை யேறி யியுர்க்கும்
பெரும்பதக்
காலையும் வாரார்கொல் வேந்தன்
அருந்தொழில்
வாய்த்த நமர்.
விளக்கவுரை :
தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தது
38. புகர்முகம் பூழிப் புரள
வுயர்நிலைய
வெஞ்சின்
வேழம் பிடியோ டிசைந்தாடுந்
தண்பதக்
காலையும் வாரா ரெவன்கொலோ
ஒண்டொடி
யூடு நிலை.
விளக்கவுரை :
39. அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த
கருங்குர னொச்சிப்
பசுந்தழை சூடி
இரும்புன
மேர்க்கடி கொண்டார் பெருங்கெளவை
ஆகின்று
நம்மூ ரவர்க்கு.
விளக்கவுரை :
பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித் தோழி தலைமகளை ஆற்றுவித்தது
40. வந்தன செய்குறி வாரா ரவரென்று
நொந்த
வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி
இந்தின்
கருவண்ணங் கொண்டன் றெழில்வானம்
நந்துமென்
பேதை நுதல்.
விளக்கவுரை :
கார் நாற்பது முற்றிற்று
