திரிகடுகம்
86 - 90 of 100 பாடல்கள்
குற்றங்களை உண்டாக்கும் பகைகள்
86. அன்புப் பெருந்தளை யாப்பு
நெகிழ்ந்தொழிதல்
கற்புப்
பெரும்புணை காதலின் கைவிடுதல்
நட்பின்
நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றம்
தரூஉம் பகை.
விளக்கவுரை :
மூடரின் செயல்கள்
87. கொல்வது தானஞ்சான் வேண்டலும்
கல்விக்கு
அகன்ற
இனம்புகு வானும் இருந்து
விழுநிதி
குன்றுவிப் பானும் இம்மூவர்
முழுமக்க
ளாகற்பா லார்.
விளக்கவுரை :
மனவுறுதியை நிலைகுலையச் செய்வன
88. பிணிதன்னைத் தின்னுங்கால்
தான்வருந்து மாறும்
தணிவில்
பெருங்கூற் றுயிருண்ணு மாறும்
பிணைசெல்வ
மாண்பின்று இயங்கலிவை மூன்றும்
புணையின்
நிலைகலக்கும் ஆறு.
விளக்கவுரை :
பிறந்தும் பிறவாதவர்
89. அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத்
துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்து
இன்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும்
பிறந்திலா தார்.
விளக்கவுரை :
நரக உலகைச் சேராமைக்குரிய வழிகள்
90. ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
சேர்தற்குச்
செய்க பெருநூலை - யாதும்
அருள்புரிந்து
சொல்லுக சொல்லைஇம் மூன்றும்
இருள்உலகம்
சேராத ஆறு.
விளக்கவுரை :