திரிகடுகம் 81 - 85 of 100 பாடல்கள்


திரிகடுகம் 81 - 85 of 100 பாடல்கள்

ஆசைக் கடலுக்குள் மூழ்குபவர்

81. தோள்வழங்கி வாழும் துறைபோல் கணிகையும்
நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர்
ஆசைக் கடலுள் ஆழ்வார்.

விளக்கவுரை :

நல்லவர் வழிகள்

82. சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் - பாய்ந்தெழுந்து
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை இம்மூன்றும்
நல்லாள் வழங்கும் நெறி.

விளக்கவுரை :

நல்வழியைக் கெடுக்காதவை

83. உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்ஆகும்
நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்ஆகும்
செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும்
செப்பநெறி தூரா வாறு.

விளக்கவுரை :

வறுமையால் பற்றப்பட்டார்

84. வாய்நன்கு அமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை உண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட் டார்.

விளக்கவுரை :

ஒற்றரின் இயல்புகள்

85. எள்ளப் படுமரபிற்று ஆகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
உள்ளிய ஒற்றாள் குணம்.

விளக்கவுரை :

திரிகடுகம், நல்லாதனார், thirikadugam, nallathanaar, tamil books