திரிகடுகம்
76 - 80 of 100 பாடல்கள்
பாதுகாத்தற்கு அரியவர்
76. மாரிநாள் வந்த வருந்தும்
மனம்பிறிதாய்க்
காரியத்திற்
குன்றாக் கணிகையும் - வீரியத்து
மாற்றம்
மறுத்துரைக்கும் சேவகனும் இம்மூவர்
போற்றற்கு
அரியார் புரிந்து.
விளக்கவுரை :
குடிப்பிறப்பில் குற்றம் அற்றவர் செயல்
77. கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை
நள்ளிருளும்
கைவிடா நட்டொழுகல் - தெள்ளி
வடுவான
வாராமல் காத்தல் இம்மூன்றும்
குடிமா
சிலார்க்கே உள.
விளக்கவுரை :
நற்றவமுடையார் செயல்கள்
78. தூய்மை உடைமை துணிவாம் தொழிலகற்றும்
வாய்மை
உடைமை வனப்பாகும் - தீமை
மனத்தினும்
வாயினும் சொல்லாமை மூன்றும்
தவத்தில்
தருக்கினார் கோள்.
விளக்கவுரை :
நெஞ்சுக்கு ஒரு நோய்
79. பழிஅஞ்சான் வாழும் பசுவும்
அழிவினால்
கொண்ட
அருந்தவம் விட்டானும் - கொண்டிருந்து
இல்லஞ்சி
வாழும் எருதும் இவர்மூவர்
நெல்லுண்டல்
நெஞ்சிற்கோர் நோய்.
விளக்கவுரை :
புதரில் விதைத்த விதை
80. முறைசெய்யான் பெற்ற தலைமையும்
நெஞ்சில்
நிறையிலான்
கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்
தேற்றாதான்
பெற்றவனப்பும் இவைமூன்றும்
தூற்றின்கண்
தூவிய வித்து.
விளக்கவுரை :