திரிகடுகம் 71 - 75 of 100 பாடல்கள்


திரிகடுகம் 71 - 75 of 100 பாடல்கள்

காணக் கூடாதவை

71. உடுத்தாடை இல்லாதார் நீராட்டும் பெண்டிர்
தொடுத்தாண் டவைப்போர் புகலும் - கொடுத்தளிக்கும்
ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும்
காண அரியவென் கண்.

விளக்கவுரை :

அஞ்சுபவை

72. நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்
மறவனை எவ்வுயிரும் அஞ்சும் இம்மூன்றும்
திறவதில் தீர்ந்த பொருள்.

விளக்கவுரை :

வாழ்வார் போல் தாழ்பவர்

73. இரந்துகொண் டொண்பொருள் செய்வல்என் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானும் இம்மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.

விளக்கவுரை :

அறத்தைக் கடைப்பிடிக்காதவர் இயல்புகள்

74. கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர்
புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன்று
ஈகென் பவனை நகுவானும் இம்மூவர்
யாதும் கடைப்பிடியா தார்.

விளக்கவுரை :

மரம்போல் அசைவற்றவர்

75. வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து
உணர்வுடையான் ஓதிய நூலும் - புணர்வின்கண்
தக்க தறியும் தலைமகனும் இம்மூவர்
பொத்தின்றிக் காழ்த்த மரம்.

விளக்கவுரை :

திரிகடுகம், நல்லாதனார், thirikadugam, nallathanaar, tamil books