திரிகடுகம் 66 - 70 of 100 பாடல்கள்


திரிகடுகம் 66 - 70 of 100 பாடல்கள்

சிறப்பில்லாதவை

66. கொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும்
சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் - பற்றிய
கோல்கோடி வாழும் அரசனும் இம்மூன்றும்
சால்போடு பட்டது இல.

விளக்கவுரை :

செய்யக்கூடிய திண்மை

67. எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பில் தொழும்பும்
செயிர்நிற்கும் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப
முந்தை பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்
நொந்தார் செயக்கிடந்தது இல்.

விளக்கவுரை :

அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை

68. இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க்கு உள.

விளக்கவுரை :

கிடைத்தற்கு அரியவை

69. அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்து
நெறிமாறி வந்த விருந்தும் இம்மூன்றும்
பெறுமா றரிய பொருள்.

விளக்கவுரை :

செல்வம் உடையார் எனப்படுவர்

70. காவோ டறக்குளம் தொட்டானும் நாவினால்
வேதம் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந்து
ஒல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர்
செல்வர் எனப்படு வார்.

விளக்கவுரை :

திரிகடுகம், நல்லாதனார், thirikadugam, nallathanaar, tamil books