திரிகடுகம் 61 - 65 of 100 பாடல்கள்


திரிகடுகம் 61 - 65 of 100 பாடல்கள்

அமைச்சர்களின் கோள்

61. ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவது எய்தாமை முற்காத்தல் - வைகலும்
மாறேற்கும் மன்னர் நிலைஅறிதல் இம்மூவர்
சீரேற்ற பேரமைச்சர் கோள்.

விளக்கவுரை :

மக்களை இழப்பவர்

62. நன்றிப் பயன்தூக்கா நாணிலியும் சான்றோர்முன்
மன்றில் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி
வைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர்
எச்சம் இழந்துவாழ் வார்.

விளக்கவுரை :

நன்மையைத் தாராதவை

63. நோவஞ்சா தாரொடு நட்பும் விருந்தஞ்சும்
ஈர்வளையை இல்லத் திருத்தலும் - சீர்பயவாத்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல.

விளக்கவுரை :

கற்புடையாளின் கடமைகள்

64. நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்
இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.

விளக்கவுரை :

மிக்க வருத்தத்தைத் தருவன

65. அச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்ற
விட்டகல கில்லாத வேட்கையும் - கட்டிய
மெய்ந்நிலை காணா வெகுளியும் இம்மூன்றும்
தம்நெய்யில் தாம்பொரியு மாறு.

விளக்கவுரை :

திரிகடுகம், நல்லாதனார், thirikadugam, nallathanaar, tamil books