திரிகடுகம்
56 - 60 of 100 பாடல்கள்
உயர்ந்த நெறியைத் தூர்க்காதவை
56. முந்தை எழுத்தின் வரவுணர்ந்து
பிற்பாடு
தந்தையும்
தாயும் வழிபட்டு - வந்த
ஒழுக்கம்
பெருநெறி சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப
நெறிதூரா வாறு.
விளக்கவுரை :
கேள்வியுள் இன்னாதன
57. கொட்டி அளந்தமையாப் பாடலும்
தட்டித்துப்
பிச்சைபுக்
குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான்
ஆளும்
கலங்கா முறுதலும் இம்மூன்றும்
கேள்வியுள்
இன்னா தன.
விளக்கவுரை :
இளவரசனின் செயல்கள்
58. பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்
கேளிர்
உவப்பத் தழுவுதல் - கேளிராய்த்
துன்னிய
சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும்
மன்னற்கு
இளையான் தொழில்.
விளக்கவுரை :
உள்ளவை போல் கெடுபவை
59. கிளைஞர்க்கு உதவாதவன் செல்வமும்
பைங்கூழ்
விளைவின்கண்
போற்றான் உழவும் - இளையனாய்க்
கள்ளுண்டு
வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்
உள்ளன
போலக் கெடும்.
விளக்கவுரை :
துன்பப் பிறப்புகள்
60. பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும்
பாஅய்
விலங்கின்
பிறப்பின் வெருவும் - புலம்தெரியா
மக்கள்
பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும்
துக்கப்
பிறப்பாய் விடும்.
விளக்கவுரை :
