திரிகடுகம் 96 - 100 of 100 பாடல்கள்


திரிகடுகம் 96 - 100 of 100 பாடல்கள்

பெய்யெனப் பெய்யும் மழை

96. கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை சொய்வான் அரசன் இவர்மூவர்
பெய்எனப் பெய்யும் மழை.

விளக்கவுரை :

பாவச் செயல்கள்

97. ஐங்குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில்.

விளக்கவுரை :

மும்மாரிக்கு வித்து

98. செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

விளக்கவுரை :

நல்லுலகம் சேராதவர்

99. கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

விளக்கவுரை :

மன்னர்க்கு உறுப்புகள்

100. பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் - வைத்துஅமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாகும் மேந்தர்க்கு உறுப்பு.

விளக்கவுரை :

திரிகடுகம் முற்றிற்று.

திரிகடுகம், நல்லாதனார், thirikadugam, nallathanaar, tamil books