நான்மணிக்கடிகை 1
- 5 of 106 பாடல்கள்
கடவுள் வாழ்த்து
1. மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
கதிர்சேர்ந்த
ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப்
பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர்
மற்றவன் கண்ஒக்கும் பூவைப்
புதுமலர்
ஒக்கும் நிறம்.
விளக்கவுரை :
2. படியை மடியகத் திட்டான் அடியினால்
முக்காற்
கடந்தான் முழுநிலம் - அக்காலத்து
ஆப்பனி
தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை
யழித்த மகன்.
விளக்கவுரை :
3. எள்ளற்க என்றும் எளியரென்று
என்பெறினும்
கொள்ளற்க
கொள்ளார்கைம் மேற்பட - உள்சுடினும்
சீறற்க
சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல்
லவற்றை விரைந்து.
விளக்கவுரை :
4. பறைபட வாழா அசுணமா உள்ளங்
குறைபட
வாழார் உரவோர் - நிறைவனத்து
நெற்பட்ட
கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட
வாழாதாஞ் சால்பு.
விளக்கவுரை :
5. மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து
ஏறிய
பின்னறிப மாநலம் மாசறச்
சுட்டறிப
பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப
கேளிரான்
ஆய பயன்.
விளக்கவுரை :