குண்டலகேசி 21 - 24 of 24 பாடல்கள்

குண்டலகேசி 21 - 24 of 24 பாடல்கள்

kundalakesi

21. நண்பகல் உறங்கும் சாலை நடுநின்றே வெளியே போந்தேன்
தன்புனல் கழுகுக் குன்றம் தனையடைந்து அலைந்த போது
நன்புடை அறவோர் கூட்டம் நடுவணே மாசில் தூயோன்
பண்புடைப் புத்தன் தன்னைப் பாவியேன் கண்டேன் கண்ணால்.

விளக்கவுரை :

22. அண்ணலை நேரே கண்டேன் அவன்முனே முழந்தாள் இட்டு
மண்ணதில் வீழ்ந்து நைந்து வணங்கினேன் வணங்கி நிற்கத்
தண்ணவன் என்னை நோக்கித் தகவொரு பத்தா இங்கே
நண்ணுதி என்றே சாற்றி நாடரும் துறவை ஈந்தான்.

விளக்கவுரை :

[ads-post]

23. அலைந்துமே அங்கநாட்டோடு அண்டுமா மகத நாடு
மலைந்த பேர் வச்சி யோடு மன்னுகோ சலமும் காசி
நலந்தரு நாடு தோறும் நாடினேன் பிச்சைக் காக
உலைந்த இவ் ஐம்ப தாண்டில் எவர்க்குமே கடன்பட்டில்லேன்.

விளக்கவுரை :
24. துறவியேன் பத்தா கட்டச் சீவரம் கொடுக்கும் மாந்தர்
முறையுடை மணத்தராகி நீள்புவி வாழ்ந்து நாளும்
குறைவில்நல் வினைகள் ஈட்டிக் கோதின் மெய் அறிவர் ஆகி
முறைமையாய் மலங்கள் நீங்கி முத்தியை அடைவார் திண்ணம்.

விளக்கவுரை :

குண்டலகேசி, நாதகுத்தனார், kundalakesi, nathakuththanar, tamil books