வளையாபதி 26 - 30 of 73 பாடல்கள்

வளையாபதி 26 - 30 of 73 பாடல்கள்

valayapathi

26. நக்கே விலாசிறுவர்; நாணுவர்; நாணும் வேண்டார்;
புக்கே கிடப்பர்; கனவும்நினை கையும் ஏற்பர்;
துற்றூண் மறப்பர்; அழுவர்; நனி துஞ்சல் இல்லார்;
நற்றோள் மிகைபெ ரிதுநாடுஅறி துன்பம் ஆக்கும்.

விளக்கவுரை :

27. அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி
அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர்
புரிவளை முன்கைப் புனைஇழை நல்லார்
விரகிலர் என்று விடுத்தனர் முன்னே.

விளக்கவுரை :

[ads-post]

28. பீடுஇல் செய்திக ளால்கள வில்பிறர்
வீடில் பல்பொருள் கொண்ட பயன் எனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்து
ஓடல் இன்றி உலையக் குறைக்குமே.

விளக்கவுரை :

29. பொய்யின் நீங்குமின்; பொய்யின்மை பூண்டுகொண்டு
ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்;
வைகல் வேதனை வந்துஉறல் ஒன்றுஇன்றிக்
கௌவை இல்உலகு எய்துதல் கண்டதே.

விளக்கவுரை :

30. கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்
நல்லில் செல்லல்க ளால்நலிவு உண்மையும்
பொய்யில் பொய்யோடு கூடுதற்கு ஆகுதல்
ஐயம் இல்லை அதுகடிந்து ஓம்புமின்.

விளக்கவுரை :

வளையாபதி, valayaapathi, tamil books