ஏலாதி 76 - 80 of 80 பாடல்கள்
76. ஒல்லுவ நல்ல உருவவேற் கண்ணினாய்
வல்லுவ
நாடி வகையினால் - சொல்லின்
கொடையினார்
போகம் சுவர்க்கம் தவத்தால்
அடையாத்
தவத்தினால் வீடு.
விளக்கவுரை :
77. நாற்கதியும் துன்ப நவைதீர்த்தல்
வேண்டுவான்
பாற்கதியின்
பாற்பட ஆராய்ந்து நூற்கதியின்
எல்லை
உயர்த்தார் தவமுயலின் மூன்(று) ஐந்(து) ஏழ்
வல்லைளீ(டு)
ஆகும் வகு.
விளக்கவுரை :
78. தாயிழந்த பிள்ளை தலையிழந்த
பெண்டாட்டி
வாயிழந்த
வாழ்வினார் வாணிகம் - போயிழந்தார்
கைத்தூண்
பொருளிழந்தார் கண்ணிலவர்க்(கு) ஈந்தார்
வைத்து
வழங்கிவாழ் வார்.
விளக்கவுரை :
79. சாக்காடு கேடு பகைதுன்பம் இன்பமே
நாக்காடு
நாட்டறை போக்குமென - நாக்காட்ட
நட்டார்க்(கு)
இயையின் தமக்கியைந்த கூ(று) உடம்
பட்டார்வாய்ப்
பட்டது பண்பு.
விளக்கவுரை :
80. புலையாளர் புண்பட்டார் கண்கெட்டார்
போக்கில்
நிலையாளர்
நீர்மை இழந்தார் - தலையாளர்க்கு
ஊண்கொடுத்(து)
ஊற்றாய் உதவினார் மன்னராய்க்
காண்கொடுத்து
வாழ்வார் கலந்து.
விளக்கவுரை :
ஏலாதி முற்றிற்று
