ஐங்குறு நூறு
236 - 240 of 500 பாடல்கள்
236. அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று
நன்மனை
நெடுநகர் புலம்புகொள உறுதரும்
இன்னா
வாடையும் மலையும்
நும்மூர்ச்
செல்கம் எழுகமோ தெய்யோ.
விளக்கவுரை :
237. காமம் கடவ உள்ளம் இனைப்ப
யாம்வந்து
காண்பதோர் பருவம் ஆயின்
ஓங்கித்
தோன்றும் உயர்வரைக்கு
யாங்கெனப்
படுவது நும்மூர் தெய்யோ.
விளக்கவுரை :
238. வாய்க்கோட்டு வயத்தகர் வாராது
மாறினும்
குரூஉமயிர்ப்
புருவை ஆசையின் அல்கும்
ஆஅல்
அருவித் தண்மெருஞ் சிலம்ப
நீஇவன்
வரூஉம் காலை
மேவரும்
மாதோஇவள் நலனே தெய்யோ.
விளக்கவுரை :
239. சுரும்புணக் களித்த புகர்முக வேழம்
இரும்பிணர்த்
துறுகல் பிடிசெத்துத் தழூநின்
குன்றுகெழு
நன்னாட்டுச் சென்ற பின்றை
நேரிறைப்
பணைத்தோள் ஞெகிழ
வாரா
யாயின் வாழேம் தெய்யோ.
விளக்கவுரை :
240. அறியோம் அல்லேம் அறிந்தனம் மாதோ
பொறிவரிச்
சிறைய வண்டினம் மொய்ப்பச்
சாந்தம்
நாறும் நறியோள்
கூந்தல்
நாறும்நின் மார்பே தெய்யோ.
விளக்கவுரை :