ஐங்குறு நூறு
231 - 235 of 500 பாடல்கள்
24. தெய்யோப் பத்து.
231. யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப
இரும்பல்
கூந்தல் திருந்திழை அரிவை
திதலை
மாமை தேயப்
பசலை
பாயப் பிரிவு தெய்யோ.
விளக்கவுரை :
232. போதார் கூந்தல் இயலணி அழுங்க
ஏதி
லாளனை நீபிரிந் ததற்கே
அழவிர்
மணிப்பூண் அனையப்
பெயலா
னாஎன் கண்ணே தெய்யோ.
விளக்கவுரை :
233. வருவை யல்லை வாடைநனி கொடிதே
அருவரை
மருங்கின் ஆய்மணி வரன்றி
ஒல்லென
இழிதரும் அருவிநின்
கல்லுடை
நாட்டுச் செல்லல் தெய்யோ.
விளக்கவுரை :
234. மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்
நன்னுதல்
பசத்த லாவது துன்னிக்
கனவிற்
காணும் இவளே
நனவிற்
காணாள்நின் மார்பே தெய்யோ.
விளக்கவுரை :
235. கையுற வீழ்ந்த மையில் வன்மொடு
அரிது
காதலர்ப் பொழுதே அதனால்
தெரியிழை
தெளிர்ப்ப முயங்கிப்
பிரியலம்
என்கமோ எழுகமோ தெய்யோ.
விளக்கவுரை :