ஐங்குறு நூறு
246 - 250 of 500 பாடல்கள்
246. வெறிசெறித் தனனே வேலன் கறிய
கன்முகை
வயப்புலி கலங்குமெய்ப் படூஉ
புன்பலம்
வித்திய புனவர் புணர்த்த
மெய்ம்மை
யன்ன பெண்பாற் புணர்ந்து
மன்றில்
பையுள் தீரும்
குன்ற
நாடன் உறீஇய நோயே.
விளக்கவுரை :
247. அன்னை தந்தது ஆகுவது அறிவன்
பொன்னகர்
வரைப்பின் கன்னம் தூக்கி
முருகென
மொழியும் ஆயின்
அருவரை
நாடன் பெயர்கொலோ அதுவே.
விளக்கவுரை :
248. பெய்ம் மணல் முற்றம் கவின்பெற
இயற்றி
மலைவான்
கொண்ட சினைஇயf வேலன்
கழங்கினால்
அறிகுவது என்றால்
நன்றால்
அம்ம நின்றஇவள் நலனே.
விளக்கவுரை :
249. பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து
அன்னைக்கு
முருகென
மொழியும் வேலன் மற்றவன்
வாழிய
விலங்கு மருவிச்
சூர்மலை
நாடனை அறியா தோனே.
விளக்கவுரை :
250. பொய்படு அறியாக் கழங்கே மெய்யே
மணிவரைக்
கட்சி மடமயில் ஆலும்நம்
மலர்ந்த
வள்ளியம் கானம் கிழவோன்
ஆண்டகை
விறல்வேள் அல்லன்இவள்
பூண்தாங்கு
இளமுலை அணங்கியோனே.
விளக்கவுரை :