ஐங்குறு நூறு
171 - 175 of 500 பாடல்கள்
18. தொண்டிப் பத்து.
171. திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது
முழவுஇமிழ்
இன்னிசை மறுகுதொறு இசைக்கும்
தொண்டி
அன்ன பணைத்தோள்
ஒள்தொடி
அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே.
விளக்கவுரை :
172. ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
வண்டிமிர்
பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக்
கடல்ஒலித் திரையென
இரவி
னானும் துயிலறி யேனே.
விளக்கவுரை :
173. இரவி னானும் இந்துயில் அறியாது
அரவுறு
துயரம் எய்துப தொண்டித்
தண்நறு
நெய்தல் நாறும்
பின்இருங்
கூந்தல் அணங்குற் றோரே.
விளக்கவுரை :
174. அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
மணங்கமழ்
பொழிற்குறி நல்கினள் நுணங்கு இழை
பொங்கரி
பரந்த உண்கண்
அம்கலில்
மேனி அசைஇய எமக்கே.
விளக்கவுரை :
175. எமக்குநயந் தருளினை யாயின்
பணைத்தோள்
நல்நுதல்
அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின்
வாழியா மடந்தை
தொண்டி
யன்னநின் பண்புல கொண்டே.
விளக்கவுரை :